முதன்முதலாக குழந்தையை அறிமுகப்படுத்திய தீபிகா, ரன்வீர் சிங் | திலீப்பின் கல்யாணராமன் படத்தை 23 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யும் நடிகர் லால் | தமிழ் இயக்குனர்களின் சாதியப் படங்கள் : துருவ் விக்ரம் விளக்கம் | காந்தாரா வராஹரூபம் பாடலுக்கு நடனம் ஆடிய பார்வதி ஜெயராம் | சிரஞ்சீவி வீட்டில் நயன்தாரா குடும்பத்தினரின் தீபாவளி கொண்டாட்டம் | எந்த ஒரு கட்டுக்கதையும் என்னை அழித்துவிட முடியாது ; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து அஜ்மல் | 3வது முறையாக பிரித்விராஜூடன் பார்வதி இணைந்து நடிக்கும் 'ஐ நோபடி' படப்பிடிப்பு நிறைவு | இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் |
தெலுங்கு சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார், என்டிஆர் என்கிற நந்தமூரி தாரக ராமாராவ், யாரும் நிரப்ப முடியாத ஆளுமை. இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதியாக புகழ்பெற்றவர். தெலுங்கு தேசம் கட்சி தொடங்கி ஒன்றுபட்ட ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக 3 முறை வெற்றி வாகை சூடியவர். பகவான் கிருஷ்ணராக நடித்து தெலுங்கு மக்கள் மத்தியில் வாழும் கிருஷ்ணராக மாறி இருந்தவர். தற்போது அவரது வாரிசுகள் தெலுங்கு சினிமாவின் முன்னணி இடத்தில் இருக்கிறார்கள்.
என்.டி.ராமராவுக்கு வருகிற 28ம் தேதி 99 வயது முடிந்து 100வது வயது தொடங்குகிறது. இதையொட்டி என்டிஆர் நூற்றாண்டு விழாவை ஆந்திரா, தெலுங்கானாவில் ஒரு ஆண்டுக்கு கொண்டாட இருக்கிறார்கள். முதல் நிகழ்ச்சியை என்டிஆரின் மகனும் 100 படங்களுக்கு மேல் நடித்த நடிகருமான என்.டி.பாலகிருஷ்ணா தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி என்டிஆர் பிறந்த நிம்மகுருவில் நடக்கிறது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசின் சார்பிலும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள தியேட்டர்களில் என்டிஆர் நடித்த படங்களை திரையிட இருக்கிறார்கள். நூற்றாண்டு நிறைவு விழாவை பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டிருக்கிறார்கள்.