ஆகஸ்ட் மாதமே திரைக்கு வரும் ரஜினியின் ஜெயிலர் | கண்ணீர் அஞ்சலி பேனர் உடன் நடிகர் ஜி.எம்.குமார் | காஷ்மீரில் நில அதிர்வு : சென்னை திரும்பிய விஜய் | மகனை தொடர்ந்து அப்பாவை இயக்கும் மாரி செல்வராஜ் | கிரிக்கெட் பயிற்சியில் ‛அட்டகத்தி' தினேஷ் | ஜீவா - அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் | லியோ படத்தில் நடிக்கிறாரா யு-டியூப்பர் இர்பான்? | ஜெயம் ரவி - ஏஆர் ரஹ்மான் இணையும் பான் இந்திய படம் | மீண்டும் கதை நாயகியான அபிராமி | டி.வி.யில் நேரடியாக வெளியாகும் ஆரி படம் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'சலார்'. பான்--இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்தின் பிரமோஷன் வேலைகளை இன்று முதல் சமூக வலைத்தளங்களில் ஆரம்பித்துள்ளனர்.
'கேஜிஎப் 2' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அப்படத்தின் இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கி வரும் படம் என்பதால் இப்போது 'சலார்' படம் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரபாஸ் நடித்து கடைசியாக வெளிவந்த 'ராதேஷ்யாம்' தோல்வியடைந்தாலும் 'சலார்' படத்தைத்தான் அவர் பெரிதும் நம்பியுள்ளார்.
கடந்த ஒன்பது மாத காலமாக சலார் படத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தார்கள். இன்று படத்தின் போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்து, படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துவிட்டார்கள். விரைவில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.