ஜுன் 2ல் இரண்டு படங்களுக்கே முக்கிய போட்டி | மாவீரன் படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது | யாஷிகா ஆனந்த் - அஜித் மைத்துனர் ரிச்சர்ட் ரிஷி காதலா...? | 37 ஆண்டுகளை நிறைவு செய்த 'விக்ரம்' | பாபா படத்தை தொடர்ந்து மற்றொரு ரஜினி படம் ரீ ரிலீஸ் | கதாநாயகன் ஆகும் பிக்பாஸ் பிரபலம் | மும்பையில் தனுஷ்... மீண்டும் ஒரு பாலிவுட் படம் | த்ரிஷா படத்தில் கெஸ்ட் ரோலில் மூன்று பிரபல ஹீரோக்கள் | நாயகன் படம் போன்று இருக்கும் : கமல் | 150 வயது வரை வாழும் வித்தை எனக்கு தெரியும் : சரத்குமார் |
ஆனந்தம், சண்டக்கோழி, பையா உள்பட பல படங்களை இயக்கிய லிங்குசாமி. தற்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் தி வாரியர் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படத்தில் கிருத்தி ஷெட்டி நாயகியாகவும், ஆதி வில்லனாகவும் நடித்து இருக்கிறார்கள். நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கும் இப்படம் ஜூலை 14ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர், இந்த போலீஸ்காரங்க தொல்லை தாங்க முடியல என்று ரெடின் கிங்ஸ்லியின் குரலில் ஆரம்பிக்கிறது. அதையடுத்து போலீஸ் கெட்டப்பில் செம பிட்டாக என்ட்ரி கொடுக்கிறார் ராம் பொத்தினேனி. அதேபோல் வில்லனாக நடித்துள்ள ஆதியும் தனது உடல் மொழியால் மிரட்டியிருக்கிறார். இந்த டீசரில் இடம்பெற்றுள்ள பான் இந்தியா படம் பாத்திருப்பே, பான் இந்தியா ரவுடிஸ் பாத்திருக்கியா மற்றும் வீரம்ங்கிறது தேடி வந்தவர்களை அடிக்கிறது இல்லை, தேடிப்போய் அடிக்கிறது போன்ற வசனங்கள் ஹைலைட்டாக அமைந்துள்ளன.