டாப்ஸி படத்தில் கதாநாயகியாக சமந்தா | விக்ரம் படம் பார்த்துவிட்டு கமலை வாழ்த்திய வானதி சீனிவாசன் | மலையாள இயக்குனர் தமிழில் இயக்கும் படத்தில் ஹீரோவாக சரத்குமார் | உருக்கமாக பதிவிட்டு அனுதாபம் தேடும் பாலியல் புகார் நடிகர் | ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன் வருகை : மற்றவர்கள் எப்போது ? | உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு 'கழகத் தலைவன்' ? | எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில் | கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம் | பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் |
சமீபகாலமாக தென்னிந்திய திரையுலகில் பான் இந்தியா என்கிற வார்த்தை அதிகமாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக தெலுங்கு இளம் முன்னணி நடிகர்கள் அனைவருமே பான் இந்திய படங்களில் நடிக்க ரொம்பவே ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதேசமயம் இவர்களிலிருந்து நடிகர் மகேஷ்பாபு சற்றே வித்தியாசப்பட்டு, எனக்கு தெலுங்கு திரையுலகில் நடித்தாலே போதுமானது என சமீபத்தில் கூறினார்.. இது உடனடியாக பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு விளக்கம் அளித்து இன்னொரு நிகழ்ச்சியில் மகேஷ்பாபு பேசியபோது பாலிவுட் திரை உலகத்தால் என்னை வாங்க முடியாது என்கிற அர்த்தம் தரும் வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். தற்போது அவர் பேசிய வார்த்தைகளை வைத்து பாலிவுட் திரையுலகில் ஒரு விவாதமே ஆரம்பித்துள்ளது. குறிப்பாக முன்னணி தயாரிப்பாளர்களான போனிகபூர், மகேஷ் பட் ஆகியோர் மகேஷ்பாபுவின் இந்த கருத்துக்கு தங்களது பதில் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போனிகபூர் கூறும்போது, “ஒவ்வொருவருக்கும் அவர்களது கருத்துக்களைக் கூறுவதற்கு உரிமை இருக்கிறது. அதேசமயம் ஒரு குறிப்பிட்ட திரையுலகை பற்றி மட்டும் தனியாக கமெண்ட் செய்ய முடியாது. ஏனென்றால் அவர் பாலிவுட், தென்னிந்திய சினிமா என இரண்டு தரப்புக்கும் சொந்தமானவர் தான்.. ஏற்கனவே தெலுங்கு மட்டுமல்லாது தமிழிலும் நடித்தது அவருக்கு ஞாபகம் இருக்கலாம். இதேபோல மலையாளத்திலும் கன்னடத்திலும் கூட அவர் விரைவில் படங்கள் நடிக்கலாம். அதனால் இதுபோன்ற கருத்துக்களை சொல்வதற்கு அவர் சரியான நபர் அல்ல' என்று கூறியுள்ளார்.
பிரபல தயாரிப்பாளரும் நடிகை ஆலியா பாட்டின் தந்தையுமான மகேஷ் பட், மகேஷ்பாபுவின் கருத்து குறித்து கூறும்போது, 'ஒருவேளை தான் கேட்கும் சம்பளத்தை கொடுத்து அவரை இந்தியில் நடிக்க வைக்க முடியாது என்பது போன்ற அவர் சொல்லியிருந்தால் அது சரியானதுதான் நான்.. அவருக்கு ஆல் த பெஸ்ட் சொல்கிறேன்.. ஒருவேளை பாலிவுட் திரையுலகம் அவரது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற மாதிரி வேலை செய்ய முடியாது என அவர் நினைத்தால், அதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.. ஒவ்வொருவருக்கும் அவர்களது சொந்த திரையுலகம் தான் இருக்கிறதே..” என்று கூறியுள்ளார்.