சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் |

வினோத் இயக்கும் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார் அஜித்குமார். போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சுவாரியர், ஜான் கொகேன் என பலர் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்தபடியாக விக்னேஷ் சிவன் இயக்கும் தனது 62வது படத்தில் நடிக்க போகிறார் அஜித். இதுகுறித்து தகவல் ஏற்கனவே வெளியாகி விட்ட நிலையில் தற்போது அந்த படத்தில் தமிழகம் முழுக்க ஓட்டல் நடத்தும் ஒரு வேடத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ஒரு இளைஞர் தனது கடின உழைப்பால் சமூகத்தில் மிகப் பெரிய மனிதராக உயரும் ஒரு கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறாராம். இந்த படத்தில் அவர் இளமையான கெட்டப்பில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.