இந்தியன் 2க்கு தயாரான காஜல் அகர்வால் | மாமனிதன் படத்திற்கு மேலும் 4 சர்வதேச விருதுகள் | ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது | சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் - விஜய் தேவரகொன்டா | தோல்விப் பட வரிசையில் அக்ஷய்குமாரின் 'ரக்ஷா பந்தன்' | வெள்ளித்திரையில் ‛விடுதலை' வேட்கை | இன்னும் ஓராண்டாகும் : ‛சலார்' புது ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்குப் படத்தை நிறுத்திவிட்டு வருகிறாரா ஷங்கர்? | திருவண்ணாமலையில் தேசியக் கொடி ஏற்றிய இளையராஜா | ‛திருச்சிற்றம்பலம்' படத்தை பார்த்த தனுஷ் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன . இப்படத்தின் இரண்டாம் பாகம் 1,100 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும்போது மூன்றாம் பக்கத்திற்கான அறிவிப்பும் வெளியாகிவிட்டது. இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல் அந்த படத்தை முடித்ததும் கேஜிஎப்-3 படத்தின் பணிகளை தொடங்க உள்ளார். இருப்பினும் இதில் நடிக்க ஹாலிவுட் நடிகர்கள் சிலரிடத்தில் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு ராஜமவுலியின் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணா இப்படத்தில் வில்லனாக நடிக்க கமிட்டாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.