பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
வெண்ணிலா கபடிகுழு, பாண்டியநாடு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என கவனிக்க வைத்த படங்களை இயக்கிய சுசீந்திரன் சமீபகாலமாக அடுத்தடுத்து படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். ஆனால் அந்த படங்கள் பெரிதாக கவனம் பெறவில்லை. ஈஸ்வரன், வீரபாண்டிபுரம் சமீபத்தில் வெளிவந்த குற்றம் குற்றமே படங்கள் அதற்கு உதாரணங்கள்.
இந்த நிலையில் அவர் அடுத்து இயக்கும் படம் வள்ளிமயில். இந்த படத்தில் விஜய் ஆண்டனி, ஜதிரத்னலு தெலுங்கு படத்தில் நடித்த பிரியா அப்துல்லா ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பாரதிராஜா, சத்யராஜ், சுனில், தம்பி ராமய்யா, சிங்கம்புலி, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகிறது. 1980களில் நடக்கிற மாதிரியான கதை. முதல்கட்ட படப்பிடிப்புகள் திண்டுக்கல்லில் தொடங்குகிறது. இது ஓடிடிக்கான படம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.