வந்தாச்சு ‛விஜய் 67' அப்டேட் : ரசிகர்கள் குஷி, இந்தவாரம் முழுக்க கொண்டாட்டம் தான் | அதிரடியில் மிரட்டும் நானியின் "தசரா" டீசர் | தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் |
இசையமைப்பளார் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகள் கதிஜாவுக்கும், சவுண்ட் இன்ஜினியர் ரியாசுதீன் ஷேக் முகமது என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களுக்கு நேற்று மாலை திருமணம் நடந்துள்ளது. மிக நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக இந்த திருமணம் நடந்தது. மகளின் திருமணம் போட்டோவை பதிவிட்டுள்ளார் ரஹ்மான். அந்த புகைப்படத்தில் மணமக்களுடன் ரஹ்மான், அவரது மனைவி சாய்ராபானு, இளைய மகள் ரஹீமா, மகன் அமீன் ஆகியோர் உள்ளார்கள்.
ரஹ்மான் கூறுகையில், ‛‛மணமக்களை எல்லாம் வல்ல இறைவன் ஆசிர்வதிப்பாராக. உங்கள் அனைவரின் வாழ்த்தையும் முன்னரே நன்றியை உரிதாக்கி கொள்கிறேன்'' என்றார்.
கதீஜா தனது பதிவில், "இதுதான் என் வாழ்வில் நான் எதிர்பார்த்து காத்திருந்த நாள். என்னவரை கரம் பிடித்தேன்" என பதிவிட்டுள்ளார். இதையடுத்து, சினிமா துறையினரும், ரஹ்மானின் ரசிகர்களும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.