சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் | மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி |

நயன்தாரா தயாரித்து நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் இருவிதமான விமர்சனங்களை பெற்றபோதும் வசூல் ரீதியாக எல்லோருக்கும் திருப்பதியை கொடுத்துள்ளது. இதற்கு நன்றி சொல்லவும், விரைவில் நடக்க இருக்கும் திருமணத்திற்கு ஆசி பெறவும் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் ஷீரடி சென்று சாய்பாபாவை தரிசனம் செய்தார்.
இருவரும் சாய்பாபா கோவிலுக்கு சென்று பாபா தரிசனம் முடிந்த பிறகு அங்குள்ள மண்டபத்தில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். ரசிகர்கள் தொல்லை இல்லாததால் அவர்கள் பலமுறை கோவிலை சுற்றி வந்துள்ளனர்.
அடிப்படையில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவராக நயன்தாரா, பிரபு தேவாவை காதலித்தபோது இந்து மதத்திற்கு மாறினார். அதன் பிறகு இந்து மதத்தின் தீவிர பக்தையாக மாறி இருக்கிறார். திருப்பதிக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்து பெண்ணாக வாழ்வதில் அவர் முழு திருப்தியும், அமைதியும் அடைந்திருப்பதையே இது காட்டுகிறது. என்கிறார்கள்.