இளம் வயது தோற்றத்தில் கிஷோர் | சினிமாவில் 20 ஆண்டுகள்: பயணம் முடியவில்லை என்கிறார் ரெஜினா | அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் | இரண்டு மாத 'வசூல் வறட்சி'யை சமாளித்த 'பைசன், டியூட்' | இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | மனோரமாவின் மகன் பூபதி காலமானார் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 மொழிகளில் ஹீரோயினாக நடித்த வைஜயந்திமாலா | பிளாஷ்பேக்: அருணாச்சலம் முன்னோடி 'பணம் படுத்தும் பாடு' | என்னது, பாகுபலி பிரபாஸ் வயது 46 ஆ? | 2ம் பாக ஜுரம் தான் மலைக்கோட்டை வாலிபன் தோல்விக்கு காரணம் : தயாரிப்பாளர் சொன்ன புது தகவல் |
மாதவன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் ராக்கெட்டரி: தி நம்பி எபெக்ட். ராணுவ ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக கைது செய்யப்பட்டு பின்னர் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படம் இது.
இந்த படம் இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. ஜூலை 1ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா மற்றும் செர்பியா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. பிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா மற்றும் ரான் டோனாச்சி போன்ற புகழ்பெற்ற சர்வதேச நடிகர்களுடன், ஷாருக்கான் மற்றும் சூர்யா ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. 'பாலைஸ் டெஸ் பெஸ்டிவல் பிரீமியர்' பிரிவில் இப்படம் திரையிடப்படவுள்ளது. இந்திய கலாச்சார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக இதனை அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாதவன் கூறியிருப்பதாவது: நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன். நான் நம்பி நாராயணனின் கதையை மட்டுமே சொல்ல விரும்பினேன், ஆனால் தற்போது நடப்பதையெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை. கடவுளின் ஆசியுடன், நாங்கள் நீண்ட காலம் காத்திருந்தோம், படத்திற்கு நடக்கும் அனைத்து நல்ல விஷயங்களையும் பார்க்க நான் நன்றியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறேன். ஒரு அறிமுக இயக்குநராக, எனக்கு அதிக பதட்டமாக இருக்கிறது. இப்படம் இந்தியாவை பெருமைப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். என்கிறார் மாதவன்.