படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' | பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் பலர் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'.
இப்படத்திற்காக எந்தவிதமான பத்திரிகையாளர் சந்திப்பு, இசை வெளியீடு உள்ளிட்ட எந்த பிரமோஷனையும் நடத்தவில்லை. ஒரு சில யூடியூப் சேனல்களுக்கு மட்டும் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி பேட்டிகளைக் கொடுத்து மற்றவர்களைப் புறக்கணித்தனர். இப்படத்திற்காக பத்திரிகையாளர் காட்சி வைக்கவும் விக்னேஷ் சிவன் விரும்பவில்லை என்று தகவல்.
ஆனால், படம் வெளியான பின் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்துவிடக் கூடாதென இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதலியும் படத்தின் நாயகியுமான நயன்தராவை தியேட்டருக்கு வரவழைத்து பிரமோஷன் செய்திருக்கிறார். நேற்று சென்னையில் உள்ள தேவி தியேட்டரில் ரசிகர்களை சந்திக்க நயன்தாரா, விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன் ஆகியோர் சென்றனர்.
நயன்தாரா இதுவரை தான் நடித்த எந்த ஒரு படத்திற்காகவும் பேட்டியும் கொடுத்ததில்லை, அவரது பட விழாக்களிலும் கலந்து கொண்டதில்லை. இந்தப் படம் தனது காதலர் படம் என்பதாலும் இந்தப் படம் வெற்றி பெற்றால்தான் அடுத்து அவர் அஜித்தை வைத்து இயக்கப் போகும் படத்திற்கு பெயர் வாங்க முடியும் என்பதாலும் காதலருக்காக இறங்கி வந்துள்ளார்.