தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! |
வலிமை படத்தை அடுத்து மீண்டும் எச். வினோத் இயக்கும் தனது 61வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் அஜித் குமார். இதை அடுத்து தனது 62வது படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கப்போகிறார். இது குறித்த தகவலும் வெளியாகி விட்டது. இந்த நிலையில் அஜித்தின் 63ஆவது படம் குறித்து ஒரு தகவலும் தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. என்றாலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
இப்படியான நிலையில் மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படம் குறித்த இரண்டு அப்டேட்கள் வெளியாக இருக்கிறது. அதில் ஒன்று தற்போது அவர் நடித்து வரும் 61ஆவது படத்தின் டைட்டில் மற்றும் அஜித்தின் 63 ஆவது படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் குறித்த தகவல் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படி அஜீத்தின் பிறந்த நாளில் இரண்டு புதிய அப்டேட் வெளியாக இருப்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.