இந்தியாவின் 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை நெட்பிளிக்ஸ் உடன் கொண்டாடுங்கள் | ஸ்பெயின் பறந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் மீனா : 40 நாட்களுக்கு பின் வெளி உலகத்திற்கு வந்தார் | லோகேஷ் கனகராஜை பாராட்டிய ரஜினி, விஜய் | விஜய் யேசுதாஸை இயக்கும் 10ம் வகுப்பு மாணவி | மீண்டும் ஐதராபாத்தில் அஜித் குமார் | சந்திரமுகி 2வில் வடிவேலுவின் கேரக்டர் விபரம் வெளியானது | சண்டைக்காட்சியில் நடித்தபோது மீண்டும் விபத்தில் சிக்கிய விஷால் | நயன்தாராவின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா? |
இயக்குனர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இளைய மகள் அதிதி சங்கர் தற்போது சினிமாவில் நடிகை ஆகிவிட்டார். மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. புதுச்சேரியை சேர்ந்த தொழில் அதிபர் தாமோதரனின் மகனும், கிரிக்கெட் வீரருமான ரோஹித்தை மணந்தார்.
அப்போது கொரோனா தொற்று பரவல் இருந்த காரணத்தால் திருமணம் எளிமையாக நடந்தது. திருமண வரவேற்பு விழா கொரோனா பிரச்சினைக்கு பிறகு பிரமாணடமாக நடத்த திட்டமிட்டிருந்தார்கள். அதன்படி மே 1ம் தேதி ஐஸ்வர்யா - ரோஹித் திருமணம வரவேற்பு விழா நடக்க இருந்தது. இதற்காக இயக்குனர் ஷங்கர் பத்திரிகை விநியோகித்து வந்தார்.
இந்த நிலையில் அந்த வரவேற்பு நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி அழைப்பிதழ் கொடுக்கப்பட்டவர்களுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மீண்டும் கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில் மருத்துவ காரணங்களுக்காக வரவேற்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் மற்றொரு தேதியில் வரவேற்பு நடக்கும் என தெரிகிறது.