'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கொரோனா இரண்டாவது அலை தாக்கம் குறைந்துள்ள நிலையில், பாலிவுட் சினிமா மறுபடியும் தியேட்டர்களில் தங்களது வெளியீட்டை துவங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது முதல் பெரிய படமாக ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள சூர்யவன்ஷி என்கிற படம் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டியுள்ள இயக்குனர் ராஜமவுலி.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ராஜமவுலி கூறும்போது, சூர்யவன்ஷி படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள், இந்த அசாதாரண சூழலில் கிட்டத்தட்ட ஒரு வருடம் படத்தை ரிலீஸ் செய்யாமல் காத்திருந்து தியேட்டர்கள் திறந்த பின்பே ரிலீஸ் செய்துள்ள தயாரிப்பாளரின் மன உறுதியை பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார். இந்த படத்தை ரிலையன்ஸ் என்டர்டைன்மெண்ட் சார்பில் ரோஹித் ஷெட்டி தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.