மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

சிலம்பரசன் நடித்த 'போடா போடி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். கடந்த பத்து வருடங்களில் மூன்றே மூன்று படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். 2015ல் வெளிவந்த 'நானும் ரவுடிதான்' படம் இயக்குனராக அவரைப் பற்றி அதிகம் பேச வைத்தது. அதன்பிறகு 2018ல் சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை இயக்கினார். சுமார் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் வரும் ஏப்.,28ம் தேதி வெளியாகிறது.
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில், ‛படம் வெளியாவதற்கு முன்பு இருக்கும் இந்த 5 நாட்கள் தான் பிரசவ வலியை போன்றது. என் லவ்வுடன், பேபியுடன் கடைசி 5 நாட்கள். இந்த வலி தேவை தான். ஏனென்றால் காதல் என்றாலே வலி இருக்கும். இசையமைப்பாளர் அனிருத்துடன் தொடர்ச்சியாக ஒவ்வொரு திரைப்பட காட்சியையும் மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டிருக்கிறேன். அனைவரும் இந்த படத்தில் அருமையாக நடித்து இருக்கின்றனர்.இந்த படத்திற்காக நேசத்துடன் அதிகம் உழைத்திருக்கிருக்கிறேன்.' என பதிவிட்டுள்ளார்.




