மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” |
சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன், சமூக வலைதளங்களில் பிரபலமான நபராக வலம் வருகிறார். தொலைக்காட்சியில் சீரியல், ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வந்த அவர், இன்ஸ்டாகிராமில் காட்டிய கவர்ச்சியின் காரணமாக சினிமா வாய்ப்பை பெற்றுள்ளார். தற்போது கமல் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படம் உட்பட சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஷிவானிக்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஒரு ரசிகர் ஷிவாணிக்கு கிப்ட் வழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வெர்ஷட்லி பாரத் என்ற ரசிகர், ஷிவானியின் புகைப்படத்தை வரைந்து பிரேம் செய்து அதில், ஷிவானி குறித்து கவிதை ஒன்றி எழுதி கிப்ட்டாக வழங்கியுள்ளார். இதை பார்த்து இன்ப அதிர்ச்சியடையும் ஷிவானி இது நீங்க எழுதிய கவிதையா என்று கேட்டு, அந்த கவிதையை அவரையே படிக்க சொல்கிறார். அந்த ரசிகர் அதை பாடலாகவே பாடிவிட, ஷிவானி அந்த ரசிகருக்கு நன்றி சொல்கிறார். கிப்டை வாங்கிக் கொண்டு கவிதையை கேட்டு வெட்கத்துடன் நிற்கும் ஷிவாணியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.