‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் | மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் | லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா | ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன் | ‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! |
தயாரிப்பாளரும், இயக்குனருமான டி.ராமாராவ்(83) சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். தமிழில் விஜய் நடித்த யூத், விக்ரம் நடித்த தில், அருள், ஜெயம் ரவி நடித்த உனக்கும் எனக்கும், விஷால் நடித்த மலைக்கோட்டை போன்ற படங்களை தயாரித்தவர் ராமாராவ். தெலுங்கு, ஹிந்தியிலும் படங்கள் தயாரித்துள்ள
இவர் இரு மொழிகளிலும் ஏராளமான படங்களை இயக்கியும் உள்ளார். குறிப்பாக தர்மேந்திரா, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல நடிகர்களின் வெற்றி படங்களை இயக்கி உள்ளார். ஹிந்தியில் ரஜினி ஹீரோவாக நடித்த அந்த கானூன் என்ற படத்தை இயக்கியதும் இவர் தான். தெலுங்கு, ஹிந்தியில் படங்களை இயக்கிய இவர் தமிழில் ஒரு படம் கூட இயக்கவில்லை.
சென்னை, தி.நகரில் வசித்து வந்த இவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு தாதினேனி ஜெயஸ்ரீ என்ற மனைவியும், சாமுண்டீஸ்வரி, நாக சுசீலா, அஜய் ஆகிய குழந்தைகளும் உள்ளனர். மாலையில் இறுதிச்சடங்கு நடக்கிறது. இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.