மீண்டும் ஹிந்தி படத்தில் கீர்த்தி சுரேஷ்? | ஆகஸ்ட் 14ல் ரஜினியின் கூலி திரைக்கு வருகிறது? | சிம்புவிற்கு ஜோடியாகும் கயாடு லோகர் | நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் படத்தில் இணைந்த நிழல்கள் ரவி | கார்த்தி சுப்பராஜ் பிறந்தநாள் : ரெட்ரோ படத்தின் 55 வினாடி மேக்கிங் வீடியோ வெளியீடு | இளையராஜாவிற்கு தங்கச்சங்கிலி அணிவித்து வாழ்த்திய சிவகுமார் | ரவி அரசு இயக்கத்தில் விஷால்? | 'கொய்யா' விற்ற பெண் பற்றி பிரியங்கா சோப்ரா பெருமிதம் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு | சச்சினுக்கு முன்பு ரீ ரிலீஸ் ஆகும் பகவதி |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த கேஜிஎப் படத்தின் இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அதிலும் கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுக்க வெளியாகி உள்ளது. அந்த வகையில் நான்கு நாட்களில் 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை புரிந்தது. இதன் காரணமாக கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகம் குறித்து எதிர்பார்ப்புகள் ரசிகர் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது.
இந்த நிலையில் தற்போது அது குறித்த ஒரு அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதாவது கேஜிஎப் மூன்றாம் பாகத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா தெரிவித்துள்ளார்.
தற்போது கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபாஸ்- ஸ்ருதிஹாசன் நடித்து வரும் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். அடுத்து ஜூனியர் என்டிஆர் படத்தை இயக்குகிறார். இதற்கு பின் கேஜிஎப் 3 துவங்கும் என தெரிகிறது.