நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் சிறந்த நீச்சல் வீரர். பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் டென்மார்க்கில் நடந்து வரும் டேனிஷ் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் சாஜன் பிரகாஷ் மற்றும் வேதாந்த் இருவர் கலந்து கொண்டார்கள். 1500 மீட்டர் நீச்சல் போட்டியில் சாஜன் பிரகாசுக்கு தங்கப்பதக்கமும், நடிகர் மாதவனின் மகனான வேதாந்தத்திற்கு வெள்ளிப்பதக்கமும் கிடைத்தது. இப்போது 800 மீட்டர் பிரிவில் வேதாந்த் தங்கம் வென்று அசத்தி உள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.