பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் |
தமிழில் கோல்மால், இருவர் உள்ளம் படங்களில் நடித்தவர் பாயல் ராஜ்புட். தெலுங்கில் ஆர்எக்ஸ் படத்தில் அறிமுகமாகி அங்கு ஏராளமான படங்களில நடித்தார். சமூக வலைத்தளத்தில் பிசியாக இருக்கும் பாயல் ராஜ்புட் நடிகைகள் மது விளம்பரத்தில் நடிப்பது தவறில்லை என்றும், பெண்கள் பொழுதுபோக்கிற்காக குடிக்கிறார்கள் என்றும் கூறி இருக்கிறார். இது வைரலாகி இருக்கிறது.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: நடிகைகள் மதுபான பிராண்டின் போஸ்டர் அல்லது விளம்பரத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடும்போது பழமைவாதிகள் அவர்களை கடுமையாக விமர்சிக்கிறார்கள். இதே காரியத்தை ஒரு நடிகர் செய்தால் யாரும் விமர்சிப்பது இல்லை. இதில் ஏன் ஆண் - பெண் வேறுபாடு பார்க்க வேண்டும். பெண்கள் பொழுதுபோக்கிற்காக மது அருந்துகிறார்கள். அதனால் பெண்கள் அதனை விளம்பரப்படுத்துவதில் தவறில்லை. என்று கூறியிருக்கிறார்.