ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? |

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன் மற்றும் பலர் நடித்த 'கேஜிஎப் 2' படம் இரு தினங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது.
படம் வெளியான ஏப்ரல் 14ம் தேதி படத்தின் இந்திய வசூல் 134 கோடியே 50 லட்சம் என தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது இரண்டாம் நாள் வசூலையும் சேர்த்து கடந்த இரண்டு நாள் இந்திய வசூலாக 240 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இரண்டாவது நாள் மட்டும் 105 கோடியே 50 லட்சம் வசூலித்துள்ளது. முதல் நாளில் 100 கோடிக்கு மேல் வசூலித்தது போலவே இரண்டாம் நாளிலும் 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை புரிந்துள்ளது.
இந்திய அளவில் மட்டும் 240 கோடி வசூல் செய்துள்ள இந்தப் படம் வெளிநாடுகளில் இரண்டு நாள் வசூலாக 50 கோடியைக் கடந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. இரண்டு நாளிலும் ஹிந்தியில் மட்டுமே சேர்த்து 100 கோடி வசூலித்துவிட்டதாக பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
' கேஜி எப் 2' படத்தின் வசூலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதைப் போல 'பீஸ்ட்' படத்தின் வசூலை அதன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.