மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

இயக்குனர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கருணாஸ், இனியா, ரித்விகா, அருண் பாண்டியன் ஆகியோர் நடித்துள்ள 'ஆதார்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பாரதிராஜா, இசையமைப்பாளர் தேவா, பூச்சி முருகன், அமீர், இரா. சரவணன், தயாரிப்பாளர் தேனப்பன், நடிகர் அருண்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
அப்போது பேசிய நடிகர் அருண் பாண்டியன் பேசியதாவது : தற்போது எல்லா மொழிப்படங்களும் தமிழ்நாட்டில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கின்றன. ஆனால் சமீபத்தில் வெளியான விஜய் படமோ, அஜித் படமோ சினிமாவுக்கு செலவு செய்யவில்லை. தங்களுக்கு செலவு செய்கிறார்கள். படத்தின் பட்ஜெட்டில் 90 சதவீதம் அவர்கள் சம்பளமாக வாங்கினால் எப்படி படம் எடுக்க முடியும்? கண்டிப்பாக எடுக்க முடியாது.
அதனால் இந்த மேடையை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டு இந்த விஷயத்தை வன்மையாக கண்டிக்கிறேன். நாங்கள் படம் எடுக்கும் போது, 10 சதவீதம் தான் சம்பளத்திற்கு வரும். 90 சதவீதம் படத்திற்கு போகும். அதனால் அன்று நமது மொழி படங்களின் கதை, மேக்கிங் பேசியது. ஆனால் இன்று அப்படி இல்லை. இதனாலேயே தமிழ் சினிமா பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என பேசியுள்ளார் .