தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் |
கடந்த 2022ம் ஆண்டில் கருணாஸ், அருண் பாண்டியன், பிரபாகர், உமா ரியாஸ் கான், ரித்விகா, இனியா, திலீபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'ஆதார்'. ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் வெளியான படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. ஆதார் கார்டு இல்லாத ஒரு சாதாரண மனிதன் படும் அவஸ்தைகளைப் பற்றி இந்த படம் பேசியது. இதில் கருணாஸ் கதை நாயகனாக நடித்திருந்தார்.
தற்போது இந்த படம் மலையாளத்தில் ரீமேக் ஆகிறது. நடிகர் திலீஷ் போத்தன், 'ஆதார்' படத்தின் தமிழ் பதிப்பில் அருண் பாண்டியன் நடித்த போலீஸ் ரைட்டர் வேடத்தில் நடிக்கவிருக்கிறார். அவரே படத்தை தயாரிக்கவும் செய்கிறார். கருணாஸ் கேரக்டரில் நடிக்க நடிகர் தேர்வு நடந்து வருகிறது. தமிழில் இயக்கிய ராம்நாத் பழனிக்குமார் மலையாளத்திலும் இயக்குகிறார்.