2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
சினிமா பிரபலங்கள் பலரும் அடையாறு அல்லது போயஸ்கார்டன் ஏரியாவில் வீடு வாங்குவதை விரும்பும் காலம் முடிந்து விட்டது. இப்போது பல நட்சத்திரங்கள் ஈசிஆர் சாலையில் பரந்த பரப்பளவு வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போயஸ் கார்டனில் இடம் வாங்கி பூமி பூஜை எல்லாம் போட்ட நடிகர் தனுஷ், அடுத்து ஈசிஆரில் குடியேற இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
நடிகர் விஜய் நீலாங்கரையில் வசித்து வருகிறார். மேலும் இயக்குனர் கவுதம் மேனனும் ஈசிஆரில் ஒரு இடத்தை வாங்கி போட்டிருக்கிறாராம். இந்த வரிசையில் இப்போது சிம்புவும் இணைந்துள்ளார். ஈசிஆர் பகுதியில் நடிகர் சிம்பு பிரம்மாண்டமான வீடு ஒன்றை வாங்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.