நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடிக்கும் விஜய்யின் 66வது படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் பூஜையுடன் ஆரம்பமானது.
சென்னையில் எளிமையாக நடைபெற்ற பூஜைக்குப் பின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. படத்தை சென்னையில் அதிகமாகப் படமாக்க வேண்டும் என்று விஜய் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பை மற்ற ஹீரோக்கள் போல ஐதராபாத்தில் நடத்தாமல் சென்னையில் நடத்துபவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் படப்பிடிப்புக்குப் பிறகான முதல் அப்டேட்டை படத்தின் நாயகி ராஷ்மிகா கொடுத்துள்ளார். பூஜையின் போது அவர் எடுத்த தனி புகைப்படங்களைப் பகிர்ந்து “இந்த ஓரிரு நாட்கள் மிகச் சிறப்பானது…இந்த மேஜிக்கை நீங்கள் பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை…” என்று பதிவிட்டுள்ளார். அவர் விஜய்யுடன் நடிப்பதைப் பற்றித்தான் அப்படி குறிப்பிட்டுள்ளார் என்பதை குழந்தைகள் கூட புரிந்து கொள்ளும். ராஷ்மிகாவின் இந்தப் பதிவிற்கு 28 லட்சம் லைக்குகள் குவிந்துவிட்டது.