''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீணா டாண்டன் மற்றும் பலர் நடித்துள்ள கன்னடப் படம் 'கேஜிஎப் 2'. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு நாளை மறுதினம் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
கேஜிஎப் படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியையும், வசூலையும் பெற்றதைத் தொடர்ந்து இந்த இரண்டாம் பாகத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கேற்றபடி படத்திற்கான வியாபாரமும் உலக அளவில் பெரிதாக நடந்துள்ளது. ஹிந்தியில் வியாபார அளவை விரிவாக்கவே படத்தில் ஹிந்தி நடிகரான சஞ்சய் தத், நடிகையான ரவீணா ஆகியோரை நடிக்க வைத்துள்ளார்கள்.
சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாக சொல்லப்படும் இப்படத்தின் உலக வியாபாரம் 400 கோடி அளவிற்கு நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகா வினியோக உரிமை 150 கோடி ரூபாய் என்கிறார்கள். அங்குள்ள 900 தியேட்டர்களில் 550 தியேட்டர்களில் 'கேஜிஎப் 2' வெளியாகிறதாம்.
தெலுங்கு உரிமை 78 கோடி, தமிழ் உரிமை 40 கோடி, ஹிந்தி உரிமை 100 கோடி, வெளிநாடு உரிமை 75 கோடி என இப்படத்தின் மொத்த வினியோக உரிமை 443 என்கிறார்கள். இப்படம் சுமார் 1000 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 100 கோடியில் தயாரான படத்திற்கு மிகப் பெரும் லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
இந்தியா முழுவதும் ஏப்ரல் 14, 15, 16, 17 ஆகிய நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் 'கேஜிஎப் 2' படத்தைப் பார்க்கப் பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 'ஆர்ஆர்ஆர்' படத்தின் வசூலை 'கேஜிஎப் 2' எளிதில் முறியடிக்க வாய்ப்பு என்றே பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.