நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கூட ஒரு தமிழ்ப் படம் அதிக தியேட்டர்களில் வெளியாகாது. ஆனால், கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில் தமிழ்ப் படங்கள் எப்போதுமே அதிக தியேட்டர்களில் வெளியாகும். காலம் காலமாக நடந்து வரும் ஒரு விஷயம் இது.
நாளை விஜய் நடித்துள்ள தமிழ்ப் படமான 'பீஸ்ட்', நாளை மறுநாள் யஷ் நடித்துள்ள கன்னடப் படமான 'கேஜிஎப் 2' ஆகிய இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
பெங்களூருவைப் பொறுத்தவரையில் கன்னடப் படமான 'கேஜிஎப் 2' ஏப்ரல் 14ம் தேதியன்று அங்குள்ள தியேட்டர்களில் மொத்தமாக 450க்கும் மேற்பட்ட காட்சிகளாக நடைபெற உள்ளது. அதே சமயம் தமிழ்ப் படமான 'பீஸ்ட்' நாளை ஏப்ரல் 13ம் தேதியன்று 750க்கும் மேற்பட்ட காட்சிகளாக நடைபெற உள்ளது. இருப்பினும் இரண்டாம் நாளில் 'பீஸ்ட்' படத்திற்கான காட்சிகள் குறைந்துவிடும். இருந்தாலும் வெளியாகும் முதல் நாளில் அதிகமான காட்சிகளில் திரையிடல் என்பது ஒரு சாதனைதான். இது இன்றைய நிலவரம். இன்னும் சில மணி நேரங்களில் கூடுதல் காட்சிகள் சேரவும் வாய்ப்புள்ளது.