இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் | கமல் உடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக் | மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி படக்குழு | 3 படம் ரீ ரிலீஸ் குறித்து நெகிழ்ந்த தனுஷ் | பொங்கல் ரேஸிலிருந்து ஒதுங்கிய விஜய் தேவரகொண்டா படம் | யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது : கவனம் ஈர்க்கும் பைட் கிளப் டீசர் | ட்ரெயின் படத்தில் நடிக்கும் வெற்றிமாறன் | கமலின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ் : புதிய டிரைலர் வெளியானது | ஸ்ரேயா போட்டோ ஷுட்டுக்கு உதவி செய்த மகள் | பழைய பாடலின் இசையுடன் 'பைட் கிளப்' டீசர் |
வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித். ஐதராபாத்தில் நேற்று இதன் படப்பிடிப்பு துவங்கியது. இந்தப் படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். இதை முடித்ததும் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார் என்பதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதில் பிக்பாஸ் புகழ் நடிகர் கவினும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கும் அந்தப்படத்தில் அஜித் கல்லூரி பேராசிரியராகவும், அவரது மாணவனாக கவினும் நடிக்க இருக்கிறார்களாம். கவின் தற்போது விக்னேஷ் சிவன் தயாரித்து வரும் ஊர்க்குருவி என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் கவினின் சின்சியாரிட்டியை பார்த்து தான் அஜித் நடிக்கும் படத்திலும் அவருக்கு முக்கியமான ஒரு கதாபாத்திரத்தை கொடுக்க முடிவு செய்தாராம் விக்னேஷ் சிவன்.