இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார் | விஜய் மில்டன் படத்தில் ஷாம் | ‛விஜய் 67' பட தலைப்பு லோடிங் : நாளை வருகிறது அறிவிப்பு | இசை படைப்புகளுக்கு சேவை வரியை எதிர்த்த ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷின் மனுக்கள் தள்ளுபடி | 90 சதவீதம் குணமடைந்துவிட்டேன் : விஜய் ஆண்டனி | விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள் | விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ? | நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? |
ராஜமவுலி படங்களின் பிரமாண்டத்துக்கும், வெற்றிக்கும் தனித்தன்மை வாய்ந்த கதைகளை உருவாக்கி கொடுத்து பக்கபலமாக இருந்து வருபவர் அவரது தந்தை விஜயேந்திர பிரசாத். சமீபத்தில் வெளியாகி ஆயிரம் கோடி வசூல் என்கிற மிகப்பெரிய இலக்கை தொட்டுள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் இரண்டு தூண்களாக நடித்த ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரின் கதாபாத்திர தேர்வு குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை வெளிப்படையாக கூறியுள்ளார்.
“இந்தப்படத்தின் கதையை உருவாக்கும்போதே இதில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் இருவரும் தான் நடிக்க வேண்டும் என்பதை உறுதி செய்துவிட்டோம்.. அதன்பின் அல்லூரி சீதாராம ராஜூ வேடத்தில் ராம் சரணையும், கொமரம் பீம் கதாபாத்திறல் ஜூனியர் என்டிஆரையும் நடிக்க வைக்க முடிவு செய்தோம்..
காரணம் ஜூனியர் என்டிஆரால் சீதாராம் கேரக்டரிலும் நடிக்க முடியும்.. கொமரம் பீமாகவும் நடிக்க முடியும்.. ஆனால் ராம்சரணுக்கு கொமரம் பீம் கதாபாத்திரம் செட்டாகாது. ஏனென்றால் கொமரம் பீம் கதாபாத்திரம் பலவகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டிய ஒன்று.. ஜூனியர் என்டிஆர் இயல்பாகவே அதில் பொருந்தி விடுவார்.. அதேசமயம் எந்நேரமும் சீரியஸாக இருக்கும் சீதாராம் கதாபாத்திரத்திற்கு ராம்சரண் ரொம்பவே பொருத்தமாக இருந்தார்” என கூறியுள்ளார் விஜயேந்திர பிரசாத்.