'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
திருமணப் பிரிவு ஏற்பட்டாலும் தனது முன்னாள் மாமனார் வீட்டுக் குடும்பத்தினருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை சமந்தா சரியாகக் கொடுத்து வருகிறார் என டோலிவுட் வட்டாரங்கள் அவரைப் பாராட்டி வருகின்றன.
நாக சைதன்யாவுடனான தனது திருமணப் பிரிவுக்குப் பிறகு முன்னாள் கணவரது குடும்பத்தைப் பற்றி எந்த ஒரு தவறான கருத்துக்களையும் சமந்தா பதிவிட்டதில்லை என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
நாக சைதன்யாவின் தம்பியும், தனது முன்னாள் மைத்துனருமான, நாகார்ஜுனா - அமலா தம்பதியினரின் ஒரே மகனும், நடிகருமான அகில் நேற்று அவரது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
தன் சமூகவலைதள பக்கத்தில் அவரது புகைப்படத்தையும் பகிர்ந்து சமந்தா, “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அகில். இந்த வருடம் மிகச் சிறந்தது உங்களுக்குக் கிடைக்க வாழ்த்துகள். நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும், உங்களுக்குக் கிடைக்க நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள் என்று நம்புகிறேன், பிரார்த்தனையும் செய்கிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.