ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் மார்ச் 25ம் தேதி வெளிவந்த படம் 'ஆர்ஆர்ஆர்'. படம் வெளியான சில நாட்களிலேயே இப்படம் அடுத்தடுத்து சில பல புதிய சாதனைகளைப் படைத்தது.
100 கோடி 500 கோடி என எளிதில் கடந்த படம், தற்போது 1000 கோடியையும் கடந்துள்ளது. இருப்பினம் 'பாகுபலி 2' படத்தின் ஒட்டு மொத்த வசூலான 1800 கோடி ரூபாயை 'ஆர்ஆர்ஆர்' படம் கடக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் இப்படத்திற்கு கூடுதலாக இன்னும் சில கோடிகள் கிடைக்கலாம். அடுத்த வாரத்தில் 'பீஸ்ட், கேஜிஎப் 2, ஜெர்ஸி' என தமிழ், கன்னடம், ஹிந்திப் படங்கள் வெளியாக உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள தியேட்டர்களை இந்த மூன்று படங்களுமே முழுமையாக பங்கு போட்டுக் கொள்ளும். எனவே, அடுத்த சில தினங்களில் 'ஆர்ஆர்ஆர்' படம் 800 கோடி வசூலைப் பெறுவது என்பது நடக்க முடியாத ஒரு விஷயம்.
இன்னும் சொல்லப் போனால் 50 கோடியைக் கடக்குமா என்பதே சந்தேகம்தான். எனவே, 'பாகுபலி 2' சாதனையை 'ஆர்ஆர்ஆர்' முறியடிக்க வாய்ப்பில்லை என்பது உண்மை. 1000 கோடி சாதனையுடன் மட்டுமே 'ஆர்ஆர்ஆர்' தனது பெருமையை முடிக்க உள்ளது.