'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? |

சூர்யாவின் 2டி எண்டர்டயின்மென்ட் நிறுவனம் 36 வயதினிலே, கடைக்குட்டி சிங்கம், உரியடி 2, பொன்மகள் வந்தாள், ராட்சசி, இராமே ஆண்டாலும் இரவணே ஆண்டாலும், உடன்பிறப்பே, ஜெய் பீம், சூரரைப் போற்று படங்களை தயாரித்தது. தற்போது பாலா இயக்கும் படத்தை தயாரித்து வருகிறது. இதற்கிடையில் சூர்யா தயாரித்து முடித்துள்ள 'ஓ மை டாக்' படம் வருகிற ஏப்ரல் 21ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தப் படம் ஒடிடி தளத்திற்கென்றே தயாரிக்கப்பட்ட படமாகும்.
இப்படத்தின் மூலம் நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். அவருடன் அருண் விஜய், விஜயகுமார், வினய், மகிமா நம்பியார், உள்பட பலர் நடித்துள்ளனர். சரோவ் சண்முகம் இயக்கி உள்ளார். ஒரு நாய்க்கும் ஒரு சிறுவனுக்குமான உறவை சொல்லும் படம். முதலில் வருகிற 14ம் தேதி வெளியிடுவதாக இருந்தனர். அந்த நேரத்தில் பீஸ்ட் வெளியாவதால் ஒருவாரம் தள்ளி 21ம் தேதி வெளியிடுகிறார்கள்.