'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணாதாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛பீஸ்ட்'. அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்திலிருந்து இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அதேசமயம் ‛கூர்கா' படத்தின் காப்பி மற்றும் சில ஹாலிவுட் படங்களின் காப்பி என சர்ச்சையும் எழுந்தது.
மால் ஒன்றில் பயங்கரவாதிகள் புகுந்து மக்களை பிணைய கைதிகளாக பிடிக்கின்றனர். அவர்களை அந்த மாலில் உள்ள மாஜி ராணுவ வீரரான விஜய் எப்படி மீட்கிறார் என்பதே கதை என டிரைலரை பார்க்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த படம் ஏப்ரல் 13ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக உலகம் முழுக்க வெளியாக உள்ளது. இந்நிலையில் குவைத்தில் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தில் முஸ்லீம்களை பயங்கரவாதிகள் போன்று சித்தரித்து இருப்பதாலும், நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதாலும் அந்நாட்டில் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே காரணத்தை காட்டி துல்கர் சல்மானின் குரூப், விஷ்ணு விஷாலின் எப்ஐஆர் படங்களுக்கும் அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.