துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
பாகுபலி படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வெற்றி பெற்ற ராஜமவுலி தற்போது ஆர்ஆர்ஆர் என்ற படத்தை 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கி வெளியிட்டுள்ளார். இந்தப் படமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதை அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை 800 கோடி பட்ஜெட்டில் இயக்கப் போகிறார். இந்த நேரத்தில் ஆர் ஆர் ஆர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு ராஜமவுலியின் தந்தையும், கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத்திடம் பதில் கொடுத்திருக்கிறார்.
அதில், ‛‛ஆர்ஆர்ஆர் 2 உருவாக வாய்ப்பு உள்ளது. இது தொடர்பான ஐடியாவை ராஜமவுலி, ஜூனியர் என்.டி.ஆரிடம் பேசி உள்ளேன். அவர்களுக்கும் பிடித்துள்ளது. ஆனார் தற்போதைக்கு ஆர்ஆர்ஆர் 2 சாத்தியமில்லை. தற்போது மகேஷ் பாபு படத்தை ராஜமவுலி இயக்க உள்ளார். அந்த படம் முடிந்த பிறகு ஆர்ஆர்ஆர் 2 பற்றி முடிவெடுக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.