புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவிக்கு வந்தபிறகு தெலுங்கு சினிமா மீது மிகப்பெரிய அளவில் கரிசனம் காட்டாமல் கடுமையான நடைமுறைகளை அமல்படுத்தி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட தியேட்டர் கட்டணங்களை அதிரடியாக குறைத்து உத்தரவிட்டார். பின்னர் இதனால் தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர் என திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் ஒன்றாக சேர்ந்து அவரிடம் கோரிக்கை வைத்ததும் தியேட்டர் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அனுமதித்தார்.
அதுமட்டுமல்ல தியேட்டர்களில் டிக்கெட் கட்டணங்களில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் விதமாக ஆன்லைன் டிக்கெட் புக்கிங் முறையை அரசு செயல்படுத்தும் என்றும் அறிவித்திருந்த ஜெகன் மோகன் ரெட்டி வரும் ஏப்ரல் முதல் அதை நடைமுறைப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளார். அதனால் இந்த ஆன்லைன் டிக்கெட் புக்கிங் முறையை செயல்படுத்துவதற்கான டெண்டரை எடுப்பதற்காக பல நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளன.
குறிப்பாக அல்லு அர்ஜுனின் சகோதரரான அல்லு வெங்கடேஷ் என்பவர் தனது கம்பெனி சார்பாக இதற்கான டெண்டரை கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்த டெண்டர் இவருக்குத்தான் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேசமயம் இதுவரை ஆன்லைன் புக்கிங் முறையில் அதிக கட்டணம் வசூலித்து கோடிகளில் கொடிகட்டி பறந்த ஒரு சில டிக்கெட் புக்கிங் நிறுவனங்கள் இந்த டெண்டரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக்கொண்டன என்றும் சொல்லப்படுகிறது..