ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகிய நடிகர் அஸ்வின் குமார் 2014 ஆம் ஆண்டிலிருந்து சினிமாவில் பல்வேறு துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் வெளியானது . மேலும் 'குட்டி பட்டாஸ்' மற்றும் அடிப்பொலி உள்ளிட்ட பல ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அஸ்வின் குமார் நடிப்பில் அடுத்து " பேபி நீ சுகர் " எனும் புதிய ஆல்பம் பாடல் தயாராகியுள்ளது. இந்த பாடலில் அஸ்வினுக்கு ஜோடியாக லாஸ்லியா நடித்துள்ளார். மாக்வென் இந்தப் பாடலை இயக்கியுள்ளார். ஓஷோ வெங்கட் பாடியுள்ளார். இந்த ஆல்பம் பாடலை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார் .