குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் டிரைலர் நாளை மறுதினம் ஏப்ரல் 2ம் தேதி மாலை 6 மணிக்கு யு டியூபில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே 'பீஸ்ட்' டீசர், டிரைலர் பற்றிய அப்டேட்டுகளை விஜய் ரசிகர்கள் கேட்டு வந்தனர். அவர்களின் கோரிக்கைக்கு ஏற்பட பட நிறுவனம் டிரைலர் பற்றிய அப்டேட்டை வெளியிட்டது.
விஜய் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'மாஸ்டர்' படத்திற்கு டீசர் மட்டுமே வெளியிடப்பட்டது. 2020 நவம்பரில் வெளியான அந்த டீசர் 72 மில்லியன் பார்வைகளை இதுவரை பெற்றுள்ளது. தமிழ்ப் பட டீசர்களில் அதிகப் பார்வைகளைப் பெற்று நம்பர் 1 இடத்தில் உள்ளது. அதற்கடுத்த இரண்டு இடங்களிலும் விஜய் நடித்த படங்கள் தான் உள்ளது. 'மெர்சல்' டீசர் 46 மில்லியன் பார்வைகளுடன் இரண்டாவது இடத்திலும், 'சர்க்கார்' டீசர் 45 மில்லியன் பார்வைகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
தமிழ் சினிமா டிரைலர்களில் விஜய் நடித்து வெளிவந்த 'பிகில்' டிரைலர் 56 மில்லியன் பார்வைகளுடன் முதலிடத்தில் உள்ளது. இப்போது 'பீஸ்ட்' டிரைலர் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த டீசர்களில் நம்பர் 1 இடம், டிரைலர்களில் நம்பர் 1 இடம் என்ற சாதனைகள் விஜய் வசம்தான் உள்ளது.
இதுவரை எந்த ஒரு தமிழ் சினிமாவின் டீசர், டிரைலர் ஆகியவை 100 மில்லியன் சாதனையைப் படைக்கவில்லை. அந்த சாதனையை 'பீஸ்ட்' டிரைலர் புரியுமா அல்லது 'பிகில்' சாதனையை மட்டும் முறியடிக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.