பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது பல படங்களில் நடித்துவருகிறார் . அவர் நடித்துள்ள செல்பி படம் நாளை(ஏப்., 1) வெளியாகிறது. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் நடித்து முடித்த திரைப்படம் 'ஐங்கரன்'. இந்த படத்தை 'ஈட்டி' படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமரே இசையமைத்துள்ளார் . நாயகியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் சில பிரச்னைகளால் படம் வெளியாகாமல் கிடந்தது. சில பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் பின்னர் தள்ளிப்போகின. இடையில் கொரானா ஊடரங்கு காரணமாக வெளியாகாமல் இருந்த இப்படம் வருகின்ற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஜிவி பிரகாஷின் இரு படங்கள் ஒரே மாதத்தில் வெளியாக உள்ளது அவருக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.