9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை |

ரஜினிகாந்த்தின் 169வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யாராய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வடிவேலு , பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்க இருக்கிறார்களாம்.
இந்த படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு இருப்பதால் அனைத்து மொழிக்கும் பொருந்தும் வகையில் ஆங்கிலத்தில் பெயர் வைக்க படக்குழு முடிவெடுத்துள்ளனர். தற்போது சில தலைப்புகள் பரிசீலனையில் இருப்பதாகவும், இந்த பட்டியலில் பாஸ் என்ற பெயரும் இருக்கிறது என்றும் இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் படக்குழுவினர் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.