Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'மூப்பில்லா தமிழே தாயே' - ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய தமிழ் கீதம்

27 மார், 2022 - 11:42 IST
எழுத்தின் அளவு:
AR-Rahman-Moopilla-Thamizhe-Thaaye-got-good-response

ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய தமிழ் கீதமான 'மூப்பில்லா தமிழே தாயே' பாடல் வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, தயாரித்துள்ள இந்த பாடல் தமிழ் கலாச்சாரம் மற்றும் பல்வேறு துறைகளைச் சுற்றியுள்ள தமிழர்களின் சாதனைகளைக் கொண்டாடுகிறது. மார்ச் 24 அன்று துபாய் எக்ஸ்போவில் ரஹ்மானின் கச்சேரியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்தப் பாடல், வெள்ளியன்று மாஜாவின் யு-டியூப் தளத்தில் ஒளிபரப்பப்பட்டது.

ரஹ்மானுடன் இணைந்து கனடா நாட்டு தொழில்முனைவோர் நோயல் கீர்த்திராஜ், சென் சச்சி மற்றும் பிரசனா பாலச்சந்திரன் ஆகிய மூவரின் சிந்தனையில் உருவானது தான் மாஜா.

'மூப்பில்லா தமிழே தாயே' பாடல் பெயருக்கு ஏற்றாற்போல், உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகத் தமிழின் புகழை குறிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பாடலாசிரியர் தாமரை எழுதிய இந்தப் பாடல், பழங்காலத் தமிழ்ப் பண்பாட்டையும், இன்று உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் பல்வேறு துறைகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் கொண்டாடுகிறது. ஊக்கம் மற்றும் தன்னம்பிக்கை தரும் பாடலாகக் கருதப்படும், 'மூப்பில்லா தமிழே தாயே' இளைய தலைமுறையினரைத் தங்கள் கலாச்சார வேர்களுடன் இணைக்கவும், தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லவும் அறிவுறுத்துகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, தயாரித்த இந்தப் பாடலில் சைந்தவி பிரகாஷ், கதீஜா ரஹ்மான், ஏ.ஆர். அமீன், அமினா ரபீக், கேப்ரியல்லா செல்லஸ் மற்றும் பூவையார் ஆகியோர் ரஹ்மானுடன் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். இவர்களுடன் ரக்ஷிதா சுரேஷ், நிரஞ்சனா ரமணன், அபர்ணா ஹரிகுமார் மற்றும் நகுல் அப்யங்கர் ஆகியோரின் கூடுதல் குரல்கள் தந்துள்ளனர்.

"இது அனைத்து தலைமுறையினரையும் உற்சாகப்படுத்தும் மற்றும் ஊக்கமளிக்கும் என்று நான் நம்புகிறேன், மேலும் தமிழ் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் பெருமையுடன் பார்க்க மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்கிறார் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஆர்ஆர்ஆர் ஒரு காவியம் ; மகேஷ்பாபு பாராட்டுஆர்ஆர்ஆர் ஒரு காவியம் ; மகேஷ்பாபு ... ஆர்ஆர்ஆர் வரவேற்புடன் பிறந்தநாள் வாழ்த்து மழையில் ராம் சரண் ஆர்ஆர்ஆர் வரவேற்புடன் பிறந்தநாள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

28 மார், 2022 - 07:56 Report Abuse
Taas Vyas இப்ப வந்து அரசியல் தொழில் ஆதாயத்துக்காக வந்து என்ன உளர்ரே, வாழ்த்தியொண்ணும்.தமிழ் வளர வேண்டும்,வேற வேலையிருந்தா போய்ப் பாரு
Rate this:
BalaG -  ( Posted via: Dinamalar Android App )
28 மார், 2022 - 00:47 Report Abuse
BalaG நன்றி ரகுமான்.. இது மேலும் தமிழின் பெருமையை உலகறிய செய்யும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in