'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலரது நடிப்பில் அனிருத் இசையமைப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்'. இந்தப் படத்தின் இரண்டு சிங்கிள்கள் இதுவரை வெளியாகி உள்ளன. முதல் சிங்கிளான 'அரபிக்குத்து' யூ டியூபில் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்தும், இரண்டாவது சிங்கிளான 'ஜாலி ஓ ஜிம்கானா' 26 மில்லியன் பார்வைகளைக் கடந்தும் ஹிட்டடித்துள்ளன.
பூஜா ஹெக்டே நடித்து இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த 'ராதேஷ்யாம்' படம் தோல்வியடைந்த நிலையில் அவர் 'பீஸ்ட்' படத்தைத்தான் அதிகம் நம்பியிருக்கிறார். அதனால், அப்படம் குறித்து அடிக்கடி அப்டேட்டுகளைக் கொடுத்து வருகிறார். இன்று 'ஜாலி ஓ ஜிம்கானா' படப்பிடிப்புப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “செட்டில் உண்மையிலேயே ஜாலி ஓ ஜிம்கானாவாக இருந்ததை நீங்கள் பார்க்க முடியும்,” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்கள் அடுத்து ஆவலுடன் எதிர்பார்க்கும் படமாக 'பீஸ்ட்' படம்தான் இருக்கிறது. படத்திற்கான வியாபாரமும், தியேட்டர்கள் ஒப்பந்தம் விறுவிறுப்பாகவும் நடந்து வருவதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.