பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

கோலிவுட்டில் அம்மா கதாபாத்திரம் என்றாலே நம் நினைவுக்கு வருவது நடிகை சரண்யா பொன்வண்ணன் தான். தற்போது இயக்குனர் விஷ்ணு ராமகிருஷ்ணன் இயக்கம் புதிய படத்தில் முன்னனி கதாநாயகியாக இவர் நடிக்கிறார்.
இது குறித்து இயக்குனர் கூறியதாவது : "சரண்யா பொன்வண்ண ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதை உடைக்க விரும்பினேன், அதனால் கேங்ஸ்டராக நடிக்க வேண்டும் என சரண்யா அவர்களை அணுகினேன். இந்த கதாபாத்திரத்திற்கும் கச்சிதமாக இருப்பார் என்று அவரிடம் கூறினேன். இந்தப் படத்தில் ராஜ் வர்மா வில்லனாகவும், அம்சத் கான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தன்னுடைய குடும்பத்தினருக்கு ஒரு பிரச்னை ஏற்படும் போது சரண்யா கேங்ஸ்டர் வழியை கையில் எடுக்கிறார் என்பது தான் கதை” என்றார் .