அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க உருவாக உள்ள படம் 'வாடிவாசல்'. இப்படத்தின் அறிவிப்பு எப்போதோ வெளியானது. ஆனால், இயக்குனர் வெற்றிமாறனும், சூர்யாவும் வெவ்வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் இப்படத்தின் படப்பிடிப்பு காலதாமதம் ஆகி வருகிறது.
இதனிடையே, இப்படத்திற்கான டெஸ்ட் ஷுட் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நடைபெற்று வருகிறது. 'வாடிவாசல்' இடத்தை அப்படியே செட்டாக வடிவமைத்துள்ளனர். அதில் மாடு பிடி வீரராக சூர்யா கலந்து கொள்ளும் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். மதுரை சுற்று வட்டாரப் பகுதிகளில் சூர்யா நடிக்க படப்பிடிப்பை மக்கள் முன் நடத்துவதில் சிரமம் ஏற்படலாம். எனவே, சென்னையிலேயே செட் அமைத்து டெஸ்ட் ஷுட் எடுத்து வருகிறார்களாம். இங்கு படமாக்கப்படுவது சரியாக வந்தால் முழு படப்பிடிப்பும் சென்னையில் நடக்கலாம் என்கிறார்கள்.
இந்த டெஸ்ட் ஷுட்டைப் பார்க்க நடிகர் சூரியும் சென்றுள்ளார். அது குறித்து, “அண்ணன் வெற்றிமாறன்- அண்ணன் சூர்யா மிரட்டும் "வாடிவாசல்"ன் டெஸ்ட் ஷூட் . ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வீரம் விளைஞ்ச நம்மண்ணின் பாரம்பரிய விளையாட்டின் பெருமையை உலகறியச் செய்யும் இந்த காவியம். வாடிவாசல் திறக்க நானும் காத்திருக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்து வரும் 'விடுதலை' படப்பிடிப்பு முடிந்த பின் 'வாடிவாசல்' படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.