ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து தொடர்ந்து நடித்து வந்தார் நடிகர் ரகுமான். துருவங்கள் பதினாறு பட வெற்றிக்கு பிறகு தமிழில் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார். அதேசமயம் மலையாளத்தில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இவர் நடித்த வைரஸ் என்கிற படம் வெளியானது. இதைத்தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது 'எதிரே' என்கிற படத்தில் நடித்துள்ளார் ரகுமான். அமல்ஜோபி என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பிரபல கதாசிரியர் சேது கதை எழுதி உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது தனது டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார் ரகுமான். அதுமட்டுமல்ல இந்த படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து ஒரு சுவாரசியமான விஷயத்தையும் அவர் கூறியுள்ளார். அதாவது படப்பிடிப்பில் இவர் பெரும்பாலும் வசனம் பேசியது எல்லாம் 'எதிரே' வைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியை பார்த்து தானாம். அந்த அளவுக்கு சஸ்பென்ஸ் திரில்லராக வித்தியாசமான முறையில் இந்த கதையை கதாசிரியர் சேது உருவாக்கியுள்ளார். அவருக்கு எனது நன்றி என்று கூறியுள்ளார் ரகுமான்.