பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
கஜினிகாந்த் படத்தில் நடித்து வந்தபோது காதல் வயப்பட்ட ஆர்யாவும், சாயிஷாவும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு கடந்த ஜூலை மாதத்தில் அரியானா என்ற மகள் பிறந்தாள். இந்நிலையில் நேற்று ஆர்யா- சாயிஷா தம்பதியினர் தங்களது மூன்றாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்து உள்ளார்கள். அதோடு போட்டில் அவர்கள் ஜாலியாக சுற்றித் திரிந்தனர். அது குறித்த புகைப்படங்களை சாயிஷா வெளியிட்டுள்ளார். அதோடு ஆர்யாவுக்கு தனது திருமண நாள் வாழ்த்துக்களையும் பதிவிட்டுள்ளார்.
அதில், நான் உங்களை என்றென்றும் நேசிக்கிறேன், மதிக்கிறேன். என்னுடையவராக இருப்பதற்கு நன்றி. உலகத்தில் சிறந்த கணவர் மற்றும் அப்பா! காலத்தால் அழியாத நம்முடைய காதல் வாழ்க என்று அவர் ஒரு பதிவு போட்டுள்ளார். அதேபோன்று ஆர்யாவும் தனது மனைவிக்கு ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். என் வாழ்க்கையில் சிறந்த துணைவி சாயிஷா. என்னை அதிகம் காதலிக்கும் சாயிஷா என்றும் குறிப்பிட்டுள்ளார்.