சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

தமிழில் பசங்க 2 மற்றும் அருண் விஜய் நடித்த தடம் ஆகிய படங்களில் நடித்தவர் வித்யா பிரதீப். இவர், தற்போது தான் டாக்டரேட் பெற்றுள்ளதையும் விஞ்ஞானியாக ஆகிவிட்டேன் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தியுள்ளார். ஸ்டெம் செல் பயாலஜியில் தான் இவர் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். ரசிகர்களுக்கு மட்டுமல்ல திரையுலகினருக்கும் இது ஒரு ஆச்சரியம் கலந்த செய்திதான்.
இதுகுறித்து தனது வித்யா பிரதீப் கூறுகையில், 'கடந்த பத்து வருடங்களாக சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் தான் நான் பணியாற்றி வந்தேன். நான் சென்னைக்கு எந்த காரணத்திற்காக வந்தேனோ அது நிறைவேறிவிட்டது. தற்போது விஞ்ஞானியாகவும் ஆகிவிட்டேன். இதற்காக கடின உழைப்பு தீர்மானம் ஆகியவற்றை கொடுத்ததுடன் சில தியாகங்களையும் நான் செய்துள்ளேன். இப்படி ஒரு இடத்திற்கு வந்திருப்பதன் மூலம் எனக்கான பொறுப்பு இன்னும் அதிகரித்து இருப்பதாக உணர்கிறேன். எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி அறிவியலுக்கும் இந்த சமூகத்திற்கும் பயன்படும் வகையில் பணியாற்றுவேன்" என கூறியுள்ளார் வித்யா பிரதீப்.