'ஜனநாயகன்' தணிக்கை தாமதம், நீதிமன்றத்தில் வழக்கு, இன்று மதியம் விசாரணை | பைரசிகளைத் தடுக்க தெலுங்கு பிலிம் சேம்பர், தெலுங்கானா போலீஸ் புதிய ஒப்பந்தம் | 'புஷ்பா 2' சாதனையை மிஞ்சப் போகும் 'துரந்தர்' | வீட்டு பூஜையில் அருள் வந்து ஆடிய சுதா சந்திரன் | அர்த்தமுள்ள கதைகளை தேடும் தீப்ஷிகா | தெலுங்கில் அறிமுகமாகும் இந்திய அழகி | அடுத்த தலைமுறைக்கு கல்வியை கொடுப்பது அவசியம்: விஜய்சேதுபதி | பிளாஷ்பேக்: சென்சாரில் சிக்கிய சோ படம் | பிளாஷ்பேக்: 'தெனாலிராமன்' சிவாஜியை கிண்டல் செய்த கண்ணதாசன் | 'ஜனநாயகன், பராசக்தி' டிக்கெட் புக்கிங் நிலவரம் எப்படி |

2022ம் ஆண்டில் இந்தியத் திரையுலகத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா படங்களில் 'ராதே ஷ்யாம்' படமும் ஒன்று. பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ராதாகிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். இப்படம் நாளை(மார்ச் 11) ஐந்து மொழிகளில் வெளியாகிறது. தமிழில் டப்பிங் ஆகி வெளியாகும் இப்படத்திற்கு தமிழகத்தில் பெரிய வரவேற்பு இல்லாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
இதற்கான முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பே ஆரம்பமானது. ஆனால், சில தியேட்டர்களில் மட்டும் 10, 20 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதி தியேட்டர்களில் ஒற்றை இலக்கத்தில்தான் முன்பதிவு நடந்துள்ளது.
பிரம்மாண்ட பட்ஜெட் படம், தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் வெளியீடு என்று வெளியாக உள்ள இப்படம் தமிழ் ரசிகர்களைக் கவராமல் போனது ஆச்சரியமாக உள்ளது என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். படத்தை சரியான விதத்தில் பிரமோஷன் செய்து விளம்பரப்படுத்தவில்லை என்றும் தியேட்டர்காரர்கள் வருத்தப்படுகிறார்களாம்.