செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
இசை ரசிகர்களை தங்களது மயக்கும் இசையால் கட்டிப் போட்டவர்கள் இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான். இவர்கள் இருவரும் துபாயில் உள்ளனர். அங்கு இருவருமே இசை நிகழ்ச்சி நடத்தினர். இந்நிலையில் துபாயில் உள்ள ரஹ்மானின் இசை ஸ்டுடியோவுக்கு இளையராஜா சென்றார். இதுப்பற்றி ரஹ்மான் குறிப்பிடும்போது, ‛‛'பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு மேஸ்ட்ரோவை(இளையராஜா) வரவேற்பதில் மகிழ்ச்சி; எங்கள் ஸ்டூடியோவுக்காக அவர் இசை அமைப்பார் என நம்புகிறேன்' என்றார்.
இதற்கு பதிலளித்துள்ள இளையராஜா, ‛‛ரஹ்மான் கோரிக்கை ஏற்கப்பட்டது. விரைவில் இசையமைப்பு தொடங்கும்'' என்றார்.
ஒருகாலத்தில் இளையராஜாவின் இசை குழுவில் பணியாற்றினார் ரஹ்மான். இன்று ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளை வென்று தற்போது உலகமே திரும்பி பார்க்கும் இசையமைப்பாளராக வலம் வருகிறார்.