மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி என எண்ணற்ற படங்களில் நடன இயக்குனராகப் பணியாற்றியவர் ராஜு சுந்தரம். அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடித்த 'ஏகன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 2008ல் வெளிவந்த அந்தப் படம் வெற்றிப் படமாக அமையாமல் தோல்விப்படமாக அமைந்தது.
அதன்பின் இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் நடன இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். கடந்த சில வருடங்களாகவே அவர் மீண்டும் இயக்கம் பக்கமும் திரும்பப் போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது தெலுங்கு நடிகரான சர்வானந்திடம் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறாராம். அக்கதையைக் கட்ட சர்வானந்த், முழு திரைக்கதையையும் தரச் சொல்லி கேட்டிருக்கிறாராம்.
14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்க நினைக்கும் ராஜு சுந்தரத்தின் ஆசையும், முயற்சியும் நிறைவேறுமா என்பது சீக்கிரமே தெரிய வரும்.