பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் |

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்டு 2018-ம் ஆண்டு வெளியான கனா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்ததோடு மட்டுமல்லாமல் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார். தற்போது கனா திரைப்படம் வரும் மார்ச் 18-ம் தேதி முதல் சீனாவில் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என அருண்ராஜா காமராஜ் மற்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளனர். ‛‛மகிழ்ச்சியாக உள்ளது. கனா படத்தின் மொத்த படக்குழுவுக்கும் பெருமையான தருணம்'' என்கிறார் சிவகார்த்திகேயன்.




